india

img

குஜராத் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் திரைப்படம் நாடாளுமன்றத்தில் ஒளிபரப்பு

புதுதில்லி பிரதமர் மோடி குஜராத் முதல் வராக இருந்த பொழுது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மூலம் முஸ்லிம் மக்களை கூண்டோடு அழிக் கும் நோக்கத்தில் இனப்படுகொலை நடைபெற்றது. இந்த இனப்படு கொலையில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் (பிபிசி ரிப்போர்ட்) உயிரிழந்தனர். 3000க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்தனர். பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளங்களைச் சேர்ந்த குண்டர்கள் முஸ்லிம் பெண் களை பாலியல் பலாத்காரம் செய்து  கொன்றனர். இந்த குஜராத் இனப் படுகொலையில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பிபிசி ஆவணப்படம் வெளியிட்டு சுட்டிக் காட்டியது.

இந்நிலையில், பிபிசி ஆவணப் படத்தை திசை திருப்பும் நோக்கத்தி லும், குஜராத் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் விதமாகவும் தீரஜ் சர்னா இயக்கத்தில் விக்ராந்த் மாஸி, ராஷி கன்னா நடிப்பில் உருவான “தி சபர்மதி ரிப்போர்ட்” திரைப்படம் 15 நவம் பர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியானது. 

பொய்யான சம்பவங்களுடன் திரைக்கதை

2002இல் சங்பரிவார் நடத்திய குஜராத் இனப்படுகொலைக்கு வழி வகுத்த கோத்ரா ரயில் பேரழிவுதான் படத்தின் கருவாக உள்ளது. ஆனால் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ரா வில் முஸ்லிம் மதக்குழுவினரால் வேண்டுமென்றே தீ வைத்து எரிக்கப் பட்டது என்றும், இதன் காரணமாகவே கோத்ராவில் வன்முறை வெடித்தது என்றும், படத்தில் சிறுபான்மையின மக்களை வில்லன்களாகச் சித்த ரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்து தள்ளும் இந்த திரைப்படம், மோடி பிரத மரானதை “புதிய சகாப்தம்” என்றும் விவரிக்கிறது.

இந்த “தி சபர்மதி ரிப்போர்ட்” படத் தை  ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜூ, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் இணைந்து பிர தமர் மோடி நாடாளுமன்றத்தில் பார்த் தார். ஜனநாயகத்தை காக்கும் நாடாளு மன்ற கட்டிடத்தில் மதவன்முறையை நியாயப்படுத்தும் “தி சபர்மதி ரிப்போர்ட்” படத்தை ஒளிபரப்பியதற்கு நாடு முழு வதும் கண்டனம் குவிந்து வருகிறது.

நாடாளுமன்றத்திற்கு வர பயம்

திரைப்படத்தை பார்த்து பொழுதைக் கழிக்கும் மோடி

நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பல் கலவரம் உள்ளிட்ட சம்பவங்களை விவா தத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு அதானியைக் காப்பாற்ற மற்றும் வன்முறை சம்பவங்களை நியாயப் படுத்துவதற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுக்கிறது. இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து 6ஆவது நாளாக முடங்கி யுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் விவாத கோரிக்கைக்கு பயந்து பிரதமர்  மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதை தவிர்த்து வருகிறார். தற்போது வெளிநாடு சுற்றுப்பயணம் இல்லாததால் “தி சபர்மதி ரிப்போர்ட்” திரைப்படத்தை பார்த்து பொழுதைக் கழிக்கிறார் பிரதமர் மோடி.

மோடியால் கிடைத்த விளம்பரம்

“தி சபர்மதி ரிப்போர்ட்” திரை க்கு வெளிவந்து 19 நாட் கள் ஆகிவிட்டது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பார்த்த  பின்பே இப்படி ஒரு படம் திரை யில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று திங்கள்கிழமை தான் தெரி யும். அதாவது பிரதமர் மோடியின் விளம்பரத்தால் “தி சபர்மதி ரிப் போர்ட்” திரைப்படம் ரிலீஸ் ஆனதே 18 நாட்களுக்குப் பின் தான் திரையுல கிற்கு தெரியவந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்தி யப்பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா, ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.