india

img

மகாராஷ்டிராவிலும் ஆட்டத்தை தொடங்கிய பெஞ்சால் புயல்

கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை அதீத கன மழையுடன் புரட்டியெடுத்த பெஞ்சால் புயல் கேர ளா, கர்நாடகா வழி யாக அரபிக் கடலில் இறங்கி மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலையாக மகா ராஷ்டிரா மாநிலத் திற்கு காலடி வைத் துள்ளது. பெஞ்சால் புயல் வருகையால் மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கண் பிரதேச பகுதியி லும், கோவா எல்லைப் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. 

பொதுவாக கரையைக் கடந்த புயல் 230 கிமீ பயணித்து சாதாரண காற்ற ழுத்த நிலையாக வலுவிழந்து விடும்.  ஆனால் பெஞ்சால் புயல் விழுப்புரம் - புதுச்சேரி அருகே கரையைக் கடந்து,  புதுச்சேரியில் நீண்ட நேரம் திசை திரும்பாமல் சுழன்று, திருவண்ணா மலை வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழையுடன் மையம் கொண்டது. இதன்காரணமாக கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 500 மிமீ அளவில் வரலாறு காணாத மழை கொட்டியது. 

அதன்பிறகு மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக கேரள எல்லையில் திரும்பி, கர்நாடகாவின் குடகு, தெற்கு கர்நாடகா, உடுப்பி, ஷிவமொக்கா, சிக்ம களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழையுடன் அரபிக் கடல் வழியாக மகாராஷ்டிராவிற்கு நுழைந்துள்ளது. பெஞ்சால் புயலால் மகாராஷ்டிராவின் கொங்கண் பிரதேசம் கடுமையாக பாதிக் கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநி லத்தில் கரையைக் கடந்த சாகர் புயல் ஐரோப்பா கண்டத்திற்குச் சென்று  அதீத அளவில் கனமழையுடன் ஸ்பெயின் நாட்டை பந்தாடியது என்பது குறிப்பி டத்தக்கது.