திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. பொதுத்தேர்வு அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் தேர்வு பெறுவதற்கு முன்பே வெளியானது.
இந்த விவகாரத்தில் முன்கூட்டியே பள்ளிகளுக்கு வினாத்தாள்களை அனுப்பிய திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் என்பவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் 2 நாட்களாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போளூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவல தயாளன் என்பவர் அளித்த புகாரின் பேரில், அக்ஸிலியம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் நிர்மல் ரோஸ், முதல்வர் கிரேசி பாத்திமா, கணித ஆசிரியர் பிரசாந்த், அலுவலக பணியாளர் ஜெனிஃபர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.