திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மறைந்த தமுஎகச தலைவர் கருப்பு கருணா பெயரில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளரும், சமரசமற்ற போரானிளியுமான கருப்பு கருணா சிலை திறப்பு விழா சனிக்கிழமையன்று (ஜன.2) திருவண்ணாமலை-திருக்கோயிலூர் சாலையில் உள்ள அவரது இல்லம் முன்பு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.பாலாஜி தலைமை தாங்கினார். அ.செந்தில்குமார் வரவேற்றார். உ.கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி தெவிவித்தார்.
சிலை திறப்பு
கருப்பு கருணாவின் உருவச் சிலையை, தீக்கதிர் ஆசிரியரும் தமுஎகச மாநிலத் தலைவவருமான மதுக்கூர் ராமலிங்கம் திறந்து வைத்தார். பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா மாலை அணிவித்தார்.கவுரவ தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வில் ஆதவன் தீட்சண்யா பேசியபோது, “பண்பாட்டு தளங்களில் தொடர்ந்து பயணம் செய்த கருப்பு கருணாவின் கட்டுரை, எழுத்து பதிவுகளை புத்தகம் ஆக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது” என்றார்.தன் கருத்தியலை குடும் பத்தாருடன் சேர்த்து வளர்த்த அவர், முழுக்க முழுக்க பண் பாட்டு பாதையில் வாழ்ந்தவர். அரசியலை மக்கள் வயப் படுத்துவது, கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல் வது போன்ற பணியில் ஈடுபட்டவர் கருணா என்றும் அவர் கூறினார்.பண்பாட்டுத் தளத்தை பயன்படுத்தி, வெகுமக் களை ஈர்க்கும் பங்களிப்புடன் வாழ்ந்தவர் கருணா. இயக் கத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல் லும் அவரின் கனவை, நம் கனவாக, மாற்றியுள்ளார் கருணா. சுயமரியாதை, போராட்ட உணர்வை தூண்டுவது போன்ற செயல்பாடுகளை செய்த கருணா பெயரால், கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் அதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என்று ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.
தமுஎகச குழந்தைவேலு, அன்பரசன், சாமிநாதன், கல்வித்துறை ரேணுகோபால், எழுத்தாளர் மணிமாறன், சைதை ஜெ, வெற்றி சங்கமித்திரா, தமுஎகச துணை பொதுச் செயலாளர் களப்பிரன், லட்சுமிகாந்தன், ஆசிரியர் மகாலட்சுமி, பேராசிரியர் பிரேம்குமார், வழக்கறிஞர் அபிராமன், புதரை பத்திரிகையாளர் பாண்டியன், நாடகவியலாளர் பார்த்திபராஜா, தீண் டாமை ஒழிப்பு முன்னணி பி.செல்வன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, இரா.தெ.முத்து, கவிஞர் சுகிர்தராணி, கல்லூரி முதல்
வர் நெடுஞ்செழியன், எழுத் தாளர் போப்பு, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் ஜோதி, மாநில பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன், இயக்குனர் கோபி நயினார், சிலை வடிவமைப்பாளர் பிரபாகரன் காசிராஜன், இயக்குனர் லெனின் பாரதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, கவிஞர்கள் வெண்புறா சரவணன், முரளி ஆகியோரின் கவிதாஞ்சலியும், இசையாளர்கள் அந்திக்காற்று பாலு, பேரா.செந்தில் வேலன், செல்லங்குப்பம் சுப்பிரமணி, வைகறை பச்சமுத்து, உத்தமன், மஞ்சுளா, ரஜினி ஆகியோரின் இசையஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.முடிவில் பரிதிமார் கலைஞர் நன்றி கூறினார்.