திருவனந்தபுரம், ஜன. 5- இந்த ஆண்டு தில்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் கேரள அரசின் அலங்கார ஊர்திகளுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தில்லி குடியரசு தின விழாவில் மாநில அரசுகள், யூனியன் பிர தேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பி க்கப்பட்டிருந்தன. அதுபோல மத்திய அமைச்சர்களும் 24 வகையான அலங்கார ஊர்தி களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 16 ஊர்திகள் மாநில அலங்கார ஊர்திகள், மத்திய அமைச்சர்கள் சார்பில் 6 ஊர்திகள் என மொத்தம் 22 அலங்கார ஊர்தி களுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம், மகா ராஷ்டிரா, கேரளா, பீகார் மாநி லத்தின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.