தேனி:
தேனி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், பெண் பயிற்சி மருத்துவர் ,சிறப்பு சார்புஆய்வாளர் உட்பட 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .
தேனி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த நபர், ஆண்டிபட்டி எஸ்.எஸ்.புரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த பெண், எரசக்கநாயக்கனூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆய்வக உதவியாளராக பணிபுரியும் சின்னமனூரை சேர்ந்த 34 வயது நபர், அல்லிநகரம் காவல்நிலையத்தில் பணிபுரியும் சமதர்மபுரத்தை சேர்ந்த 47 வயது சிறப்பு சார்பு ஆய்வாளர், தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் 23 வயது பயிற்சி மருத்துவர் உட்பட 138பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தேனியில் கடந்த 21 நாட்களில் 2093 பேருக்குகொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஏப்ரல் 4, ஜூன்12, ஜூன் 30 ஆம் தேதிகளில் தலா ஒருவர் வீதம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஜூலை 21 ஆம் தேதி வரை 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இதுவரை மொத்தம் 54 பேர் வரை உயிரிழந்துள்ளனர் .
மாநில அரசால் கொரோனா கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு காலதாமதமாக வந்த நெடுஞ்சாலைத்துறை செயலாளர்கார்த்திக், தடுப்பு நடவடிக்கை எடுப்பார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி தேனிக்கு வந்த அவர் ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட இடத்தை பார்த்துவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு சென்றுவிட்டார். அவர் கடமை முடிந்துவிட்டதாக கருதி விட்டார். கட்டுப்படுத்த பட்ட பகுதிகளில் ஊரடங்கு என்று சொல்லிவிட்ட மாவட்ட நிர்வாகம்,உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாவட்டத்தில்முழு ஊரடங்கை அறிவித்தது சாதாரண மக்கள்தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியும் தேனி மாவட்டத்தை கவனிக்கவில்லை.மொத்தத்தில் தேனி மாவட்ட நிர்வாகம் முடக்கியுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக தலையிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கி விட வேண்டும்என கோரிக்கை எழுந்துள்ளது.