தேனி , ஏப்.17-தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அ.ம.மு.க., அலுவலகத்தில் செவ்வா யன்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 1.48கோடி ரூபாய் பணம் கைப்பற்றப் பட்டது. போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 150-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று இரவு 8 மணி அளவில் அ.ம.மு.க., ஆண்டிபட்டி அலுவலகத்தில் வாக்காளர் களுக்கு கொடுப்பதற்காக அதிக அள விலான பணம் வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அ.ம.மு.க., அலுவலகம் இருந்த வணிக வளாகத்தின் மாடியில் ஒரு அறையில்சிலர் பணத்தை எண்ணிக்கொண்டி ருந்தனர்.
பறக்கும்
படையினரை கண்டஅவர்கள் பணத்தை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்ட னர். நான்கு பேர் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டனர். பணத்தை கைப்பற்றி பாதுகாப்புக்காக பறக்கும் படை மற்றும் காவல்துறையினர் இருந்தபோது, திடீரென்று வந்த மர்மகும்பல் வணிக வளாகத்தில் இருந்த விளக்குகளை அணைத்து விட்டு, கிரில் கேட், கதவுகளை உடைத்து பணத்தை எடுத்துள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த முடியாத போலீசார் வானத்தை நோக்கிதுப்பாக்கியால் மூன்று முறை சுட்டனர்.இதனைத் தொடர்ந்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவத்தை தொடர்ந்து தேனி எஸ்.பி.,பாஸ்கரன் தலைமையில் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டனர். வணிக வளாகம் முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். வணிகவரித்துறை அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னி லையில் கைப்பற்றப்பட்ட பணம் விடியவிடிய எண்ணப்பட்டு கணக்கிடப் பட்டது. கைப்பற்றப்பட்ட மொத்த பணம் ஒரு கோடியே 48 லட்சத்து 52,900 ரூபாய் கருவூலத்தில் ஒப்ப டைக்க கொண்டு செல்லப்பட்டது.
4 பேர் கைது
இச்சம்பவத்தில் தொடர்புடைய நாச்சியார்புரத்தை சேர்ந்த பழனி (54), ஆண்டிபட்டியை சேர்ந்த சுமன்ராஜ் (21), பிரகாஷ்ராஜ் (22), சிலோன்காலனியை சேர்ந்த மது (33) ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 150-க்கும் மேற்பட்டோர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அதிகாரிகளுக்கு கொடுங்காயம் ஏற் படுத்துதல், அவதூறு வார்த்தை பேசிதுஷ்பிரயோகம் செய்தல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.