tamilnadu

img

பட்டா வழங்கிய இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு? சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்கள் 1050 பேரின் வாழ்வாதாரம் பறிப்பு....

தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசால்1050 பேருக்கு  வீட்டு மனை பட்டா வழங்கப் பட்ட பகுதிக்கு அடிப்படை வசதி மற்றும் அவர்களுக்கு வீடு கட்ட கடனுதவி செய்து தரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பா.ராமமூர்த்தி ,மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்லவி பல் தேவிற்கு எழுதியுள்ளகடிதத்தில், “பொருளாதாரத்தில் பின்தங்கி வசதிவாய்ப்பற்ற நிலையிலிருந்த தாழ்த்தப்பட்ட,  சிறுபான்மை மக்களுக்கு 2000-ஆம்ஆண்டு பொட்டல்காடு பகுதியில் சுமார் 1050 வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அங்குஎந்த அடிப்படை வசதியும் இல்லாததால் பட்டா பெற்ற மக்கள் வீடுகட்ட முடியாத நிலையில் இருந்தனர்”. தற்போது அந்தப்பகுதியின்  அருகே நான்கு வழிச்சாலை அமைந்துள்ள நிலையில் பயனாளிகள் அனைவரும் அவர்களுக்கான இடத்தில் குடிசை அமைத்துள் ளனர்.  இதன் மூலம் சுமார் 5,000 பேர் வசிக்கக்கூடிய புதிய நகரம் உருவாகும். எனவே பொட்டல்காடு பகுதியில் முழுமையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றித்தர வேண்டும்.

பொட்டல்காடு பயனாளிகளுக்கான இடத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட  இருப்பதாக தெரியவருகிறது. ஏற்கனவே பட்டா கிடைத்தும் அடிப்படை வசதிகள் இல்லாததால் வீடுகட்ட முடியாத நிலையில் உள்ள மக்கள்  மத்தியில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.பொட்டல்காடு பகுதியில்  அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் ஏற்கனவே பட்டாவைத்துள்ள பயனாளிகள் அவரவர் வாய்ப்புக்கேற்ப வீடுகட்டத் தயாராக உள்ளனர். அவர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் வீடு கட்ட மானியத்துடன் கூடிய நிதிஉதவி, நபார்டு போன்ற வங்கிகள் கடனுதவி செய்யவேண்டும்.அடுக்குமாடி குடியிருப்பு அரசின் சேவைதிட்டமாக உள்ளதால் பிற பகுதிகளில் உள்ளஅரசு நிலங்களுக்கு அதை மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.