tamilnadu

ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபடுவாரா ஆட்சியர்? போடியில் தனிமைப்படுத்தப்பட்டோரை வேறு முகாமுக்கு மாற்ற முயற்சி

போடி, மே 19- தேனி மாவட்டத்தில் குறிப்பாக போடியில் ஊரடங்கு கேலிக்கூத்தான நிலையில்ஆக்கப்பூர்வமான பணி களை மேற்கொள்வது குறித்து யோசி க்காமல் “போராடினார்கள்” என்ற  ஒரே காரணத்திற்காக தனிமைப்படு த்தப்பட்டுள்ளவர்களை வேறு முகா மிற்கு மாற்ற முயற்சி நடந்தது. வேறு மாநிலங்கள், சிவப்பு மண்டலமாவட்டங்களிலிருந்து தேனி மாவட்டத் திற்கு வந்த 158 பேர் போடி  அரசு பொறியியல் கல்லூரியில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆரம்ப கட்ட பரிசோதனையில் கொரோனா அறிகுறி இல்லை என த்தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்வதற்காக இவர்களின் சளி மற்றும் இரத்த மாதிரிகள் மதுரை  ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட டி.சுப்புலாபு ரத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இங் குள்ள 157 பேர்  தங்களை வீட்டுக்கு அனுப்பவலியு றுத்தி போராட்டம் நடத்தினர்.

இதை யடுத்து இவர்களில் 71 பேரை பெரிய குளம்மற்றும் ஆண்டிபட்டி பகுதியில்  தனிமைபடுத்தும் முகாம் அமைத்து அங்கு மாற்றுவதற்காகு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இரண்டு பேருந்துகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், வேறு தனிமைப்படுத்தும் முகாம்களு க்கு மாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இறுதிகட்ட பரிசோதனை முடிவு வந்தவுடன் தங்களை வீட்டுக்கு த்தான் அனுப்ப வேண்டும். அதுவரை தாங்கள் இந்தமுகா மிலேயே தங்குவதாகவும் தெரிவித்த னர். இறுதிகட்டபரிசோதனை முடிவு செவ்வாய்கிழமைதெரியவரும் என்ப தால் வேறு முகாமுக்கு தங்களை மாற்றாமல், முடிவு வந்தவுடன் வீட்டு க்கு அனுப்ப வேண்டும் என வலி யுறுத்தினர். இதையடுத்து போடி அரசுபொறியியல் கல்லூரியில் தனி மைபடுத்தப் பட்டவர்களை வேறு முகாம்களுக்கு மாற் றும் முடிவு கை விடப்பட்டது.