ஆணையம் உத்தரவிட்டால், வாக்குப் பதிவு நடத்துவதற்கு முன்னேற்பாடாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்தனர்.
பின்னர், கோயம்புத்தூரி லிருந்து மின்னணு வாக்குப் பதிவு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக அறையைத்திறந்து, அவை பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்தானா என்பதை தெரிந்து கொள்வதற்கு அரசியல் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இளங்கோவன் சந்தேகம்
இந்த நிலையில் புதன்கிழமை காலை தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.மகராஜன் ஆகியோர், வாக்குப்பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் தேனிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது, சட்டவிரோத செயல் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:
கோயம்புத்தூரிலிருந்து தேனிக்கு வந்துள்ள 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் உடனடியாகத் திருப்பியனுப்ப வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நல்ல முறையில் வாக்குப் பதிவு நடந்துள்ள நிலையில், இரு வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப் பதிவு நடத்துவது என்ற பேச்சுக்கே இட மளிக்கக் கூடாது என்று ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை திரும்ப அனுப்புவது குறித்து ஆட்சியர் உத்தர வாதம் அளிக்கவில்லை. எங்களது கோரிக்கைகளை தேர்தல் ஆணை யத்திற்கு தெரிவித்து, அவர்களது உத்தரவின்படி நட வடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தேனிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதற்கான காரணம் அதிகாரிகளுக்கு தெரிய வாய்ப் பில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் ஏதாவது செய்திருக்கலாம். அப்படி ஏதாவது நடந்தால், மாவட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தேனி மாவட்ட திமுக பொறுப்பா ளர் நா.ராமகிருஷ்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், தாலுகா செயலாளர் சடையாண்டி, சிபிஐ மாவட்டச் செயலாளர் பெத்தாட்சி ஆசாத், விடுதலைச்சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் நாகரத்தினம், ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் திமுக வேட்பாளர் சரவணக்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். (ந.நி.)