தேனி, மே 18- தேனி மாவட்டத்தில் ஊரடங்கு கேலிக் கூத்தானது. கொரோனா தொற்றை மூடி மறைப்பதால் மாவட்ட நிர்வாகத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்டத் திற்கு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள் ளது. தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை கொரோனா 43 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு தேனி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்தார். எஞ்சிய 42 பேர் குணம் பெற்று வீடு திரும்பியதாக அறி விக்கப்பட்டது. மே மாதம் 2- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதிவரை 38 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் 17-ஆம் தேதி மாநில சுகாதாரத் துறை தேனி யில் புதிய தொற்று இல்லை என அறி வித்தது. ஆனால் அன்றைய தினமே ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே பாலக் கோம்பை கிராமத்திற்கு வட மாநி லத்திலிருந்து திரும்பிய இருவர், பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பிரசவத்திற்கு சென்ற ஒரு பெண், காமாட்சிபுரத்திற்கு இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வந்த நபர், முத்து லாபுரத்தில் மேலும் ஒரு பெண்ணிற் கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதை மாவட்ட நிர்வாகம் மூடி மறைத்து விட்டது. அதே போல கடந்த 8-ஆம் தேதி தொற்று உறுதி செய்யப் பட்ட ஐந்துபேரை தாமதமாக அறி வித்தது.
கோயம்பேடாகும் போடி
தேனி மாவட்டம் போடியைப் பொறுத்தமட்டில் பொதுப் போக்கு வரத்து மட்டும் தான் இயங்கவில்லை. எல்லாம் வழக்கம் போல் செயல்படு கின்றன. போடி கீரை மார்க்கெட் கோயம் பேடாக மாறிவிட்டது . அரசு அறி வித்தபடி கபசுர குடிநீர் வழங்கி பாது காக்க மாவட்ட நிர்வாகம் தவறி வரு கிறது. நோய் கண்டறியப்பட்ட பகுதி களில் கிருமி நாசினி தெளிக்கப்படு வதால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. வெளிமாநிலத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களை தேவ தானப்பட்டி அருகே மருத்துவப் பரி சோதனை செய்யப்பட்டு ஆண்டிபட்டி தனியார் பொறியியல் கல்லூரி, போடி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தப் பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு எவ் வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப் பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் தெரு தெருவிற்கு காவல்துறையினர் வாகனங்களில் செல்லும் பொது மக்களை கெடு பிடி செய்கின்றனர். பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அரு கில் மதுக்கடைகள் தேவைக்கேற்ப மாவட்ட நிர்வாகத்தால் அதிகரிக்கப் பட்டு வருகிறது .திருவிழா கூட்டம் போல் மதுக்கடைகளில் திரளும் குடி மகன்களால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. கொரோனா தொற்று தொடர்பாக செய்தியாளர்களுக்கு தகவல் தெரி விக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித் துள்ளார். இதனால் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தேனி அரசு மருத் துவக்கல்லூரி முதல்வர் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து வருகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர், வாட்ஸ்ஆப் குரூப் பில் செய்தி வெளியிடுவதோடு சரி. செல்போனில் தொடர்பு கொண்டால் பேச மறுத்து வருகிறார். தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பற்றிய அறிவிப்பை மூடி மறைப்பது, காலம் தாழ்த்தி அறி விப்பது தொடர்கதையாகிவருகிறது. தேனி மாவட்டம் உள்ளிட்ட மதுரை மண்டலத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதி காரி காமராஜ் தேனி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. தனிமைப்படுத்தப் பட்ட முகாம், கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ள பகுதிகளுக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே தேனி மாவட் டத்தில் கொரோனா தொற்று பரவா மல் தடுக்க, கண்காணித்திட சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- நமது நிருபர்