தேனி:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேனி மாவட்ட சிஐடியு துணைத்தலைவரும் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான தோழர் ஏ.கருப்பசாமி உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தேனி தாலுகாகுழு உறுப்பினராகவும், கிளைச்செயலாளராகவும் திறம்படபணியாற்றினார். சிஐடியுமாவட்ட துணைத்தலைவராகவும், சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.கடந்த 8- ஆம் தேதி உடல் நிலை சரியில்லாத நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழனன்று பிற்பகல் உயிரிழந்தார் .தோழர் ஏ.கருப்பசாமி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மூத்த தலைவர் கே.ராஜப்பன், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகன், மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் பி.முருகேசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.