tamilnadu

தோல்வி பயத்தில் அதிமுக ஒரே நாளில் ரூ. 120 கோடி பட்டுவாடா ? கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்

தேனி ஏப்.16-தேனி தொகுதியில் தோல்வி பயத்தில் உள்ள அதிமுக எப்படியேனும் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்ஆளுங்கட்சியினர் ஒரேநாள் இரவில் மட்டும் ரூ.120 கோடியை பட்டுவாடா செய்துள்ளனர்.தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், காங்கிரஸ் கட்சியின்சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல்அமீது, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதாகிருஸ்ணன் உள்ளிட்ட 30 பேர் போட்டியிடுகிறார்கள்.அதிமுக சார்பில் போட்டியிடும் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் கடந்த ஒருஆண்டாக எம்.பி பதவிக்கு குறிவைத்துஅதிமுக மற்றும் அரசு விழாக்களில்திட்டமிட்டுமுன்னிலைப்படுத்தப்பட்டார். தர்ம யுத்தத்தின் போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு பக்க பலமாக வந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனுக்கு கூட சீட்டுவழங்காமல் தனது வாரிசான ரவீந்திரநாத்குமாருக்கு அதிமுகவில் சீட்டு வாங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று நினைத்த ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்திற்கு வருவார் என சிந்திக்கவில்லை.


இதன் விளைவு பணத்தை கோடி கோடியாக இறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளங்கோவன் ஆரவாரமில்லாமல் வாக்காளர்களை சந்தித்துஆதரவு திரட்டி வருகிறார். இத்தொகுதியில் பன்னீர்செல்வம் மீதுள்ள அதிருப்தியால் பல்வேறு தரப்பு மக்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தங்கியிருக்கும் இல்லத்திற்கே சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் கலக்கமடைந்த ஓ.பன்னீர்செல்வம் தினந்தோறும் மக்களை திரட்டி வாக்கு சேகரிக்க, பிரச்சாரத்தை கேட்க என அவர்களுக்குபணத்தை இறைத்து வெறும் கூட்டத்தைகாட்டிவந்தார்.   இந்நிலையில் ஞாயிறன்று இரவு 10 மணிக்கு தேனி தொகுதி முழுவதும்அதிமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடாவை துவக்கினர். பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் இரண்டு தொகுதிகளில் மட்டும் ரூ.1000 வீதம்வழங்குவது எனவும் மற்ற 4 தொகுதிகளில் ரூ.500 மட்டும் வழங்கினால் போதும் என அதிமுக தலைமை கூறியதாக தெரிகிறது. எனினும் தேனி தொகுதியில் அதிமுக பலவீனம் அடைந்து வருவதாகஉளவுத்துறையினர் தெரிவித்ததைத் தொடர்ந்து ஓட்டுக்கு ரூ.1000 வீதம் கொடுப்பதற்கு முடிவுசெய்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று கதவை தட்டிஅவர்களை எழுப்பி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டு1000 ரூபாய் வீதம் கொடுத்தனர். தேனிநாடாளுமன்ற தொகுதியில் ரூ.120 கோடி வரை ஒரே நாள் இரவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ எந்தவித ஆட்சேபணை இன்றி பட்டுவாடா செய்யப்பட்டது.