கும்பகோணம், மார்ச் 23- தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய குழு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்க துணை செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் காதர் ஹுசேன், ஒன்றிய செயலாளர் முரளிதரன், மாவட்ட குழு உறுப்பினர் கஸ்தூரி பாய், பொருளாளர் தங்கராசு, துணை தலைவர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமகிருஷ் ணன், வரதராஜன், சுப்ரமணி யம், பத்மநாபன், நஜீர் அஹமது, ராமதாஸ்,மணி வேல், கண்ணன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்டீஸ் வரம், பாபநாசம் இடையே விவசாய விளை நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங் கள் அமைக்கும் பணிகள் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும் நடைபெறுவதற்கு கண்ட னம் தெரிவித்து கொள்வது டன், உரிய இழப்பீட்டை உறுதி செய்த பின்னரே பணி கள் தொடரப்பட வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை யில் ஏற்றுக்கொண்டபடி மேலசெம்மங்குடி, கருப்பூர் கிராமத்தில் மின் மோட்டார்க ளுக்கு போதுமான மின்சாரம் வழங்கப்படாததை கண்டித் தும், உடனடியாக போது மான மின்சாரம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மீது உரிய நடவடிக்கை இல் லாத நிலையில் போராட் டங்களை முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யப் பட்டது.