தஞ்சாவூர், மார்ச் 14- தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியில், முன் பணம் கோருபவர்களுக்கு உடனடியாக பணத் தொகை வழங்கிட வேண்டும். மாதங்கள் கடந்தும் ஜிபிஎப், எஸ்எல்எஸ், பயணப்படி, இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை காலம் தாழ்த்தா மல் வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலி யுறுத்தி தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ் தலைமை வகித்தார்.மாநில துணைத்தலை வர் எஸ்.ராஜாராமன் சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் அந்தோணிசாமி, மணி வண்ணன், ஷேக் அகமது உஸ்மான் உசேன், தேவந்திரன் ,ரமேஷ், ராதா, ரவி ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட துணை செயலா ளர். சங்கர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.