தட்டாரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்தீஷ்வரியை பணிசெய்ய விடாமல் தடுக்கும் கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஓழிப்பு முன்னணி ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் முனியப்பன், வாலிபர் சங்கம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட துணை அமைப்பாளர் அக்பர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.