tamilnadu

img

குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு  குறிச்சி ஐபிஇஏ மாணவிகள் தேர்வு  

தஞ்சாவூர் நவ.14- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டிற்கு, பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி இந்தியன் பேங்க் எம்ப்ளாயிஸ் அசோசியேசன் (ஐபிஇஏ) பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த நவ.9 சனிக்கிழமையன்று நடைபெற்றது. தேர்வுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகளில் “பூப்பெய்திய பெண்களின் சுகாதாரம் மற்றும் நன்மை தீமைகள்” குறித்த ஆய்வு, வேலூர் மாவட்டம் ஆற்காடு மகாலட்சுமி கலைக்கல்லூரியில் எதிர்வரும் 16, 17 தேதிகளில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற 9- ஆம் வகுப்பு மாணவிகள் சுபஸ்ரீ, ரஷிகா மற்றும் வழிகாட்டி ஆசிரியை மேனகராதா ஆகியோர் மாநில மாநாட்டில் பங்கேற்கின்றனர்.  தேசிய மாநாட்டிற்கும் மாணவிகள் தேர்வு பெற வேண்டும் என ஐபிஇஏ பள்ளியின் கல்விக்குழு மற்றும் அறங்காவ லர்கள் குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.