தஞ்சாவூர், செப்.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி பெண் உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தங்கமுத்து திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு கட்சி பாபநாசம் ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர் உசேன் தலைமை வகித்தார். கட்சி செயல்பாடுகள், மக்கள் நலனுக்கான போராட்டங்கள் குறித்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, கட்சி அமைப்பு, செயல்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். பயிற்சி வகுப்பில் 60-க்கும் மேற்பட்ட கட்சி பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.