தஞ்சாவூர், மார்ச்.10-- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், குறுவள மைய அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக் கான 2 நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில், முதல்நாளான புதனன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில், பள்ளிக ளின் தலைமை ஆசிரியர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுய உதவிக் குழுவினர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான வியாழனன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில், இடை நிலை ஆசிரியர்கள், பள்ளி மேலாண் மைக் குழு உறுப்பினர்கள், சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பில் ஆசிரியர் அ.காஜா முகைதீன் கருத்தா ளுநராக செயல்பட்டார். பயிற்சி வகுப்பில் பள்ளி வளர்ச்சிக் கான மேம்பாட்டு திட்டம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் பெற்றோர்களை ஒருங்கி ணைத்தல் குறித்து விரிவாக எடுத்துரைக் கப்பட்டது. ஒரு பள்ளிக்கு ஒரு தலைமையாசி ரியர், ஒரு உதவி ஆசிரியர், 2 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், ஒரு கல்வியாளர் அல்லது ஒரு பெற்றோர் என 5 உறுப்பினர் களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது.