தஞ்சாவூர், ஆக. 1- தஞ்சாவூர் மாவட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) சார்பில் வேளாண்மை விரி வாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தி ற்குள்ளான பயிற்சி இணைய தள வழியாக 14 வட்டாரங்க ளிலும், அந்தந்த துறையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூல மாக நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, நீடித்த நிலையான கரும்பு சாகுபடி, பயிர் காப்பீடு முக்கியத்துவம், இயற்கை வழி வேளாண்மை, மண் மற்றும் மண்வள அட்டை மேலாண்மை, இயற்கை வழியில் காய்கறிகள் பயிரிடல், தேனீ வளர்ப்பு, மல்பரி நாற்று வளர்ப்பு, கால்நடைகளுக்கு நுண்ணூட்ட கலவை, உள்நாட்டு மீன் வளர்ப்பு, சூரிய ஒளி மின்சக்தி பய ன்பாடு வேளாண்மைத்துறை மற்றும் இதர துறைகள், தரம் வாய்ந்த விதை நெல் உற்பத்தி, ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் இணையதள வழியாக நடை பெற்றது. மூத்த வேளாண் வல்லுநர் பி.கலைவாணன், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, குருங்குளம் கரும்பு அலுவலர் முனைவர் ஜெ.இந்திரஜித் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் வட்டாரங்களி லிருந்து விவசாயிகள் காணொளி காட்சி மூலம் பயிற்சியில் கலந்து கொண்டனர்.