tamilnadu

img

கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்க்கும் அரசு

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று உள்ளது. இந்த குழுவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று பெரும்பாலான பெற்றோர்புகார் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில்12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 75 விழுக்காடு பள்ளிகளில் அரசுநிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாகவே கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும் கட்டண நிர்ணயக்குழுவுக்கு தெரியும். இருந்தாலும் பெற்றோர் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅந்தக்குழு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது.புகார் தெரிவித்தால் தங்களது குழந்தைகளைப் பள்ளி நிர்வாகம் துன்புறுத்தக்கூடும் என்றும் இதனால் அந்த குழந்தையின் படிப்பு தடைபடும் என்றும் பெரும்பாலான பெற்றோர் கவலைப்படுகிறார்கள். இதன் காரணமாகவே புகார் தெரிவிக்கத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையே மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து அந்தக்குழு பள்ளிகளுக்குச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டால் உண்மை வெளியே வரும். ஆனால் அதற்கான முன் முயற்சிகளை பள்ளிக்கல்வித்துறை எடுக்கவில்லை.தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று உள்ளது. இந்த குழுவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று பெரும்பாலான பெற்றோர்புகார் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில்12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 75 விழுக்காடு பள்ளிகளில் அரசுநிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாகவே கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும் கட்டண நிர்ணயக்குழுவுக்கு தெரியும். இருந்தாலும் பெற்றோர் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅந்தக்குழு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது.புகார் தெரிவித்தால் தங்களது குழந்தைகளைப் பள்ளி நிர்வாகம் துன்புறுத்தக்கூடும் என்றும் இதனால் அந்த குழந்தையின் படிப்பு தடைபடும் என்றும் பெரும்பாலான பெற்றோர் கவலைப்படுகிறார்கள். இதன் காரணமாகவே புகார் தெரிவிக்கத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையே மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து அந்தக்குழு பள்ளிகளுக்குச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டால் உண்மை வெளியே வரும். ஆனால் அதற்கான முன் முயற்சிகளை பள்ளிக்கல்வித்துறை எடுக்கவில்லை.


பெற்றோர், மாணவர் அமைப்புகள் பலமுறை வலியுறுத்திய பின்னர்தான் முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த அதிகாரியைச் சந்திக்க பெற்றோர் சென்றால் அவர் அங்கு இருப்பதில்லை. முகாமிற்குச் சென்று விட்டதாகப் பதில் வருகிறது. பல பள்ளிகளில் பெற்றோர் போராட்டம் நடத்திய பின்னரே கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு சட்டத்தின் படி அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் அந்த பள்ளிநிர்வாகி மீது குற்றவியல் வழக்கு தொடரலாம்.ஆனால் தமிழகத்தில் பல பள்ளிகளில் கூடுதல் கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளனர். இதுபோன்ற ஆதாரம் இருந்தும் குற்றவியல் வழக்கு தொடுக்க பள்ளிக்கல்வித்துறை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநில அரசின் பராமுகத்தால் பல ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்குஆளாகியுள்ளனர். தங்களது குழந்தைகள்நன்றாக படிக்கவேண்டும் என்பதற்காகப் பலபெற்றோர் கடன் வாங்கி பள்ளிக்கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள். அவர்களது கவலையை போக்கவேண்டிய பள்ளிக்கல்வித்துறையும் தமிழக அரசும் தவறிழைக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகளைப் பாதுகாத்து பெற்றோருக்கு மாபெரும் துரோகமிழைத்து வருகிறது. இனியும் இதுபோன்ற நடக்காமல் இருக்க மாநில அரசு உடனே இதில் தலையிடவேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முன்வரவேண்டும்.