கும்பகோணம், பிப்.12- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பகுதி யில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலை யம் திறக்க கோருதல் சம்பந்த மாக கடந்த பிப்.9 அன்று, தீக்கதிர் நாளிதழில் ‘அறு வடை செய்த நெல்லை எங்கே விற்பது?’ என்கிற தலைப்பில் செய்தி வெளி யானது. அதன் அடிப்படையில், விவசாயிகளின் கோரி க்கையை ஏற்று செவ்வா ய்க்கிழமை நாச்சியார்கோ வில் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திற க்கப்பட்டது. இதன்மூலம், நாச்சியார்கோவில் பகு தியை சுற்றி உள்ள விவசா யிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோ விந்தராவ் நாச்சியார்கோவில் பகுதி யில் இயங்கி வரும் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வில் ஈடு பட்டார். அப்போது விவசா யிகளிடம் கொள்முதல் நிலை யம் சம்பந்தப்பட்ட குறை களை கேட்டறிந்தார். விவசா யிகளின் பயன்பாடு குறித்தும் அலுவலர்களுக்கு கொள்மு தல் நிலையத்தில் சட்ட நெறி முறைகளை அமல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தி னார். நாச்சியார்கோவில் ஊரா ட்சி மன்ற தலைவர் மகே ஸ்வரி உமாசங்கர், மக்கள் தொடர்பு அதிகாரி சுருளி பிரபு உள்ளிட்ட அரசு அதிகா ரிகள் உடனிருந்தனர். செய்தி வெளியிட்ட தீக்க திருக்கும் நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு உதவிய நாச்சியார்கோவில் ஊராட்சி மன்ற தலைவ ருக்கும் நாச்சியார்கோயில் பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.