tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி பூலாங்கொல்லை அரசுப் பள்ளியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடக்கம்

தஞ்சாவூர், மார்ச் 4- தீக்கதிர் செய்தி எதிரொலியாக பூலாங்கொல்லை அரசுப் பள்ளியில், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஒன்றியம் கொளக்குடி ஊராட்சி யைச் சேர்ந்த பூலாங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று வீசிய கஜா  புயலின் போது சேதமடைந்தது.  இதனால் கடந்த 15 மாதங்களாக பள்ளி மாணவ, மாணவிகள் குடிநீரு க்காக தவித்து வந்தனர். இந்நிலை யில் தற்போதைய ஊராட்சி ஒன்றிய க்குழு உறுப்பினர் குழ.செ.அருள்நம்பி இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய பெரு ந்தலைவர் மற்றும் ஒன்றிய அதிகா ரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.  இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் கடந்த பிப்.22 அன்று விரிவான செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்து  மாணிக்கம், ஊராட்சி ஒன்றிய ஆணை யர்கள் கை.கோவிந்த ராஜன், ரமேஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்த னர்.  புதன்கிழமை ஒன்றியப் பெருந்த லைவர் மு.கி.முத்து மாணிக்கம், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகை யில், பள்ளி வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.