tamilnadu

க.அன்பழகன் மறைவு அனைத்துக் கட்சியினர் புகழஞ்சலி

தஞ்சாவூர், மார்ச் 8- திமுக பொதுச்செயலாளர் க.அன்பழ கன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து கட்சியினர் சார்பில் தஞ்சையில் சனிக்கிழமை மாலை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அன்பழகனின் உருவப் படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புகழஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.  அமைதி ஊர்வலத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா தலைமை வகித்தார். இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பி னர் சி.மகேந்திரன், மாவட்டச் செயலா ளர் மு.அ.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், மாநகரச் செயலாளர் என்.குரு சாமி, திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் கோ உதயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி, காங்கிரஸ் கட்சி வயலூர் எஸ்.ராமநாதன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராள மானோர் கருப்பு சட்டை, கருப்பு பட்டை அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.