தஞ்சாவூர், ஏப்.13-மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் மாவட்டம்பட்டுக்கோட்டை அருகே செங்கப் படுத்தான்காடு கிராமத்தில் பிறந்தவர். இவரது எழுத்தாற்றலுக்கு புகழ்சேர்க்கும் வகையில் தமிழக அரசுசார்பில் நினைவு மணி மண்டபம்பட்டுக்கோட்டையில் அமைக்கப் பட்டது. இந்நிலையில் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு, பட்டுக்கோட்டை கோட் டாட்சியர் பூங்கோதை சனியன்று மரியாதை செலுத்தினார். பட்டுக்கோட்டையாரின் மகனும், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (ஓய்வு) க.குமரவேல் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.