tamilnadu

img

மக்கள் விரோத மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.11- கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு ஆதரவான, மக்கள் விரோத மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து சிஐடியு சார்பில் தஞ்சை ரயிலடியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் து.கோவிந்த ராஜ் தலைமை வகித்தார். செய லாளர் சி.ஜெயபால் கண்டன உரையாற்றினார். மாநிலக் குழு நிர்வாகிகள் பி.என்.பேர்நீதி ஆழ்வார், கல்யாணி, மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, இ.டி.எஸ். மூர்த்தி, த.முருகேசன், கே. வீரையன், கே.பாலமுருகன், எஸ். செங்குட்டுவன், மருந்து விற் பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், தரைக் கடை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமாறன், பொருளா ளர் ராஜா, நகராட்சி ஒப்பந்த தொழி லாளர் சங்க தலைவர் ஜெயபிர காஷ், போக்குவரத்து சங்கம் ராம சாமி, மின் ஊழியர் மத்திய அமை ப்பு அதிதூத மைக்கேல்ராஜ் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி, பிஎஸ்என்எல், ரயில்வே, ஏர் இந்தியா என அனைத்து அரசு துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்தும், பெருமுதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, வரிச்சலுகை வழங்கு வதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.