tamilnadu

img

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு திரைக்கலைஞர் ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி: அமைச்சர், ஆட்சியர் பாராட்டு

தஞ்சாவூர், ஆக.8- திரைக்கலைஞர் ஜோ திகா தஞ்சை அரசு ராசா  மிராசுதார் மருத்துவம னைக்கு, குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உப கரணங்களையும், குழந்தை கள் வார்டுக்கான சீரமை ப்புக்கான தொகையும் என 25  லட்சம் ரூபாய் அளவிற்கு நிதி யுதவி வழங்கியுள்ளார். திரைக்கலைஞர் ஜோ திகா தஞ்சாவூர், ராசாமிராசு தார் அரசு மருத்துவம னையில் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு படப்பிடிப்பு க்காக சென்ற போது, மருத்துவ மனையை சுற்றி பார்த்தார்.  இதையடுத்து மருத்துவ மனை முறையாக பராமரிப்பு  இல்லை. தாய் – சேய் முறை யாக கவனிக்கப்படுவது இல்லை என நிகழ்ச்சி ஒன்றில்  தெரிவித்தார். அதன் பிறகு மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யப்பட்டு, 15-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜோ திகா சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுரையுடன் பேசி,அகரம் அறக்க ட்டளை மூலம், எக்ஸ்ரே கருவி, படுக்கை, சுவாசக்  கருவி போன்ற உபகரணங்க ளையும், குழந்தைகள் வா ர்டுகளை சீரமைப்பு செய்வ தற்காக தனியாக பணமாக வும் என 25 லட்சம் ரூபாய் நிதி  உதவியை அளித்தார். இதை ஜோதிகா சார்பில், திரைப்பட இயக்கு நர் இரா.சரவணன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜ யபாஸ்கரிடம் வழங்கி னார். இதயைடுத்து விஜய பாஸ்கர், ஜோதிகா செய்தி ருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார். ஆட்சியர் ம.கோவிந்தராவும் நன்றி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியின் போது, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை, வேளாண் துறை  அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா எம்.பி. வைத்தி லிங்கம் உடனிருந்தனர்.