tamilnadu

தஞ்சாவூர், திருப்பூர் முக்கிய செய்திகள்

வாக்கு எண்ணுமிடத்தில் அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்ட பணியாளர்கள் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடு

தஞ்சாவூர், ஜன.2- தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியது. ஆனால் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளவர்க ளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தேர்தல் பணியில் ஆண் பணியாளர்க ளை காட்டிலும், பெண் பணியாளர்கள் மூன்று மடங்கு அதிகமாக இருந்தனர். ஆனால் பள்ளி வளாகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே கழிவறை இருந்த தால் அவை போதுமானதாக இல்லாமல் இருந்தது. பணியாளர்களுக்கு உணவு வழங்கியதும் அதை சாப்பிடக் கூட இட மில்லாத காரணத்தால் பலரும் கையில் வைத்துக்கொண்டு நின்றபடியே சாப்பிட்ட னர். கை கழுவ ஒரே ஒரு தண்ணீர் குழாய் மட்டுமே இருந்ததால் பெரும் சிரமத்தில் தவித்தனர். வியாழக்கிழமை மதியம் இரண்டு மணியாகியும் மதிய உணவு வராததால், பணியாளர்கள் சோர்வடைந்தனர். சர்க்கரை நோய் உள்ள பணியாளர்கள் கடும் அவதிப்பட்டனர். பின்னர் மதியம் 2.30 மணிக்கு உணவு வந்ததால், ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு உணவு பொட்ட லத்தை வாங்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தி பணியாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு கிடைக்காததால், வெளியே கடை களுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீர் குடிக்க குவளை ஏதும் இல்லாததால், அங்கிருந்த பிளாஸ்டிக் வாளி மூடிகளில் தண்ணீரை பிடித்து பணியாளர்கள் தாகத்தை போக்கிக் கொண்டனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவு களை அறிவிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால், வெற்றிப் பெற்ற வேட்பா ளர்கள் சான்றிதழ் பெற நீண்ட நேரம் ஆகி யது. பலருக்கு இன்று (3-ம் தேதி வழங்கு வதாக அறிவித்தனர். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படாத காரணத்தால், வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அறி விக்க பணியாளர்கள் குழப்பத்திலேயே செயல்பட்டனர். மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணுமிடங்களில் பத்திரிகையாளர்கள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்ததாக, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது. இத னால் பத்திரிகையாளர்கள் செல்போன்க ளை வாக்கு எண்ணுமிடத்துக்கு கொண்டு செல்ல முடியாமல், செய்திகளை உடனுக்கு டன் அனுப்ப முடியாமல் அவதிப்பட்டனர். அதே போல், ஊரக உள்ளாட்சித் தேர்த லில் வெற்றி பெற்றவர் யார், வாங்கிய வாக்குகள் என்ன, என்ற எந்த தகவலும் அதி காரப்பூர்வமாக அதிகாரிகள் பத்திரிகையா ளர்களுக்கு வழங்கவில்லை. ஆனால் பத்திரிகையாளர்கள் கடும் சிரமத்துடன் செய்திகளை வாசகர்களுக்கு கொண்டு சேர்க்க பல வழிகளிலும் முயன்று செய்தி களை சேகரித்தனர்.

வகுப்பறையில் ஓவியம் வரைந்த மாணவர்கள்

திருப்பூர்,ஜன.02- திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு-2 மற்றும் இளை ஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து வகுப்பறைகளுக்கு வர்ணம் அடித்து சித்திரம் வரையும் நிகழச்சி செவ்வாயன்று  நடைபெற்றது. இதில், மாணவர்கள் குழுக்க ளாக பிரிந்து வர்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மாதிரி வகுப்பறையாக விலங்கி யல்துறையில் விலங்குகள்,பூச்சிகள் சம்பந்தமாக சுவரில் ஓவியங்கள் வரைந்தனர். இதுகுறித்து அலகு 2 ஒருங்கிணப்பா ளர் மோகன்குமார் கூறுகையில், புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு ஒவ்வொரு வகுப்ப றையிலும் அந்தந்த பாடத்திற்கு ஏற்ப ஓவியங்களை வரைவது என முடிவு எடுத்துள்ளோம்.அவ்வாறு வரைவதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புத் துணர்வு ஏற்படும், வகுப்பு எடுக்கும் சூழல் நன்றாக அமையும்,என்றார்.இந்நிகழச்சிக் கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தீபா செய்திருந்தார்.