தஞ்சாவூர் ஆக.25- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட புதுப்பட்டினம் கிராமத்தில் சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் இராமலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவ அலுவலர் இலக்கியச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், நாடியம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் சிவ.மதிவாணன், கிராமத் தலைவர் சங்கரவேல், முஸ்லீம் ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது, ஊராட்சி செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டனர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் பாம்பன் நன்றி கூறினார்.