tamilnadu

img

பெருமாகவுண்டம்பட்டியில் இலவச ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம்

இளம்பிள்ளை, மார்ச் 15- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இல வச ஹோமியோபதி சிறப்பு  மருத்துவ முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. இம்முகாமினை பெருமாகவுண்டம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா சதீஷ் துவக்கி வைத்தார். இம்முகாமில் ரோட்டரி கிளப் ஆப்  சேலம் மிட் டவுன் ஹேம லதா வரவேற்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து பவிநாயக மிஷன் ஹோமியோ பதி மருத்துவக் கல்லூரியின்  முதல்வர் நாக ராஜ் சிறப்புரையாற்றினார். இம்முகாமில் ஆஸ்துமா, அலர்ஜி, சிறுநீரக கற்கள், மலச் சிக்கல், குடல்புண்,  தலைவலி, மூட்டுவலி,  ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி,  முடி உதிர்தல்  உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு ஆலோசனையும்,  மருந்துக ளும் வழங்கப்பட்டன. இம்முகாமிற்கான ஏற்பாட்டினை விநாயகா மிஷன்ஸ் ஹோமி யோபதி மருத்துவக் கல்லூரியும்,  ரோட்டரி கிளப் ஆப்  சேலம் மிட்டவுனும்,ரோட்ட ராக்ட் கிளப் ஆப் (கேஐஓடி),   உன்னத் பாரத் அபியான்(2.0) இணைந்து நடத்தியது. மேலும், முகாமில் மருத்துவர் வெற்றி வேந்தன்,   நாலேஜ் பொறியியல் கல்லூரி முதல்வர்  சீனிவாசன்,  ஒன்றிய குழு உறுப்பி னர் சாஸ்தா, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் வடிவேல், சபரிராஜன்  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.