tamilnadu

சிறுவனுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமை வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

தஞ்சாவூர், ஆக.5- பேராவூரணி அருகே பாலியல் வன்கொ டுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சிறுவன், உடல்நலக் குறைவு காரணமாக அரசு மரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவ ல்துறை உரிய விசாரணை நடத்தி, நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்க ப்பட்ட சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடு த்துள்ளனர்.  இதுகுறித்து கூறப்படுவதாவது, தஞ்சா வூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறு வன், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரு கிறார்.  கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி யளவில், கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு  சென்ற சிறுவனை, அதே பகுதியைச் சேர்ந்த  வேன் ஓட்டுநராகப் பணிபுரியும் சக்திவேல் (28)  என்பவர், மிரட்டி வற்புறுத்தி ஓரினச் சேர்க்கை யில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அச்சி றுவன், பேராவூரணி அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகிறார்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின்  பெற்றோர், பேராவூரணி காவல்நிலையத்தில் திங்கள்கிழமை  புகார் அளித்துள்ளனர். மேலும், சக்திவேல் தங்களை மிரட்டி, தங்கள் குடும்ப பெண்களை மார்பிங் செய்து, ஆபாச மாக முகநூலில் பதிவேற்றம் செய்வதாக அச்சுறுத்துவதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்க ப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவித்தார். 

வாலிபர் கைது 
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பேராவூரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.