தஞ்சாவூர் ஆக24- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலின் பொது உறுப்பினர்களின் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக அப்துல் முத்தலிபு, செயலாளராக ஏஷியன் சம்சுதீன், பொருளாளராக கான்முகமது, துணைத் தலைவராக கமருதீன், துணைச் செயலாளராக அப்துல்லா, உயர் மட்டக்குழு உறுப்பினர்களாக முகமது கனி, சேக் அலாவுதீன், பஷீர் அலி, ராஜா முகமது, அல்லாபிச்சை, இப்றாகீம், நாகூர் பிச்சை ஆகியோரும் மற்றும் 14 பேர் கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.