tamilnadu

img

பள்ளி ஆண்டு விழா  

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 70-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளித் தாளாளர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் வி.குமார், கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் கொடுத்த ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டி பேசினார்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.இராமகிருட்டிணன், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.ஜெயபால், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி ஆண்ட றிக்கை வாசித்தார். உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.நாகராஜன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் எம்.உமர் பாருக் தொகுத்தளித்தார். நிறைவில் ஆசிரியர் எஸ்.குணசேகரன் நன்றி கூறினார்.