சிதம்பரம், ஏப். 5- சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 59ஆம் ஆண்டு விழா குமராட்சி வட்டார கல்வி முதன்மை அலுவலர் குமார் தலைமையில் நடை பெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், மோகன், 7ஆவது வார்டு மன்ற உறுப்பினர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ெஜயக்கொடி வரவேற்றார். ஆசிரியை அனுராதா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின், பொறியாளர் மகாராஜன், பேராசிரியர் ராமநாதன் ஆகிய கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன், ஆராதியா ஸ்கேன் உரிமையாளர் மருத்துவர் ஆனந்த், ரம்யா ஆனந்த், மகளிர் உதவி ஆய்வாளர் ெஜயசீலி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளவரசன், ஆசிரியர் பயிற்றுநர் பாஸ்கரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி உதயபானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற மாணவர்களின் பறை இசை, சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நடனம் ஆகியவை அனைவரையும் வெகு வாக கவர்ந்தது.