tamilnadu

img

16 மாதங்களாகியும் கஜா புயல் நிவாரணம் வழங்காததால் சீரமைக்கப்படாமல் முடங்கி கிடக்கும் கயிறு தொழிற்சாலைகள் 8 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு

தஞ்சாவூர், மார்ச் 15- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியில் காயர் புராடக்ட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஓனர் அசோசியேசன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் அக்ரி கோவிந்தராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். பொருளாளர் கே.அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.சுப்பிரமணியன், வேலாயுதம், முத்து வைரவன், எம்.கே.சுப்பிரமணியன், துரை அரசன் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்திற்கு பின் சங்க நிர்வாகி கள் கூறியதாவது, “பேராவூரணி பகுதியில் 75-க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலை கள் உள்ளன. அவற்றின் உரிமை யாளர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழிற்சாலையை நடத்தி வந்தனர். சுமார் 5,000 குடும்பங் களுக்கு நேரடியாகவும், 3,000 குடும்பங்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்து, கடந்த 15 ஆண்டுகளாக கயிறு தொழில் சிறப்பாக இயங்கி வந்தது.  இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம்  தேதி வீசிய கஜா புயலால் அனைத்து  தொழிற்சாலைகளும் முழுமையாக பலத்த சேதம் அடைந்தது. சேத விப ரங்கள் மாவட்ட தொழில் மையங் கள் மூலமாகவும், வருவாய் துறை  மூலமாகவும் மதிப்பீடு செய்யப் பட்டு இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்து தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.  ஆனால், பல கோடி ரூபாயை இழந்து பாதிக்கப்பட்டு 16 மாதங்களை கடந்த நிலையில் நிலையில் இருக்கும் கயிறு தொழிற்சாலை உரிமையாளர் களுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்காத நிலை உள்ளது. இதனால் தொழிற்சாலையை சீரமைக்க முடியாமலும், தொடர்ந்து நடத்த முடியாமலும் இருக்கிறோம். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாவட்டத்தில் வேளாண்மை தொடர்புடைய கயிறு தொழிற் சாலைகள், கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பையும், மத்திய- மாநில அரசுக்கு வரி  வருவாயையும் ஈட்டித் தந்துள் ளது. ஆனால் கயிறு தொழிற்சாலை களின் இன்றைய நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. எனவே  தமிழக அரசு உடனடியாக இது குறித்து பரிசீலித்து, பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலை உரிமையா ளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.