கும்பகோணம், மே 28- தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் 54 காட்டுக்குறிச்சி கிராமத்தில் புதிதாக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி காட்டுக்குறிச்சி பாசன வாய்க்கால் பாசனதாரர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கும்பகோணம் கோட்ட மேலாளரிடம் மனு வழங்கப்பட்டது. அம்மனுவில், காட்டுக்குறிச்சி கிராமத்தில் 90 சதவீத விவசாய நிலங்களில் குறுவை சாகுபடி நடைபெற்று அறுவடைக்கு தயாராக உள்ளது. ஊரடங்கு நிலையில் அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பதற்கு நாலு கிமீ கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால் காட்டுக்குறிச்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கிட வேண்டும். அங்கு அரசுக்கு சொந்த இடம் மற்றும் சாலை வசதிகள் உள்ளன மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.