tamilnadu

img

சட்டப்படியான ஊதியம் வழங்கக் கோரிக்கை தஞ்சாவூரில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் டிச.15- தஞ்சை ரயிலடியில், ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  ஐதராபாத்தை தலைமையிட மாகக் கொண்ட எஸ்.ஆர்.எண்டர் பிரைசஸ் என்ற தனியார் நிறு வனத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தற்காலிகப் பணி யாளர்களாக வேலை செய்து வரு கின்றனர். இந்த தொழிலாளர் களுக்கு தினசரி சம்பளமாக ரூ.447 மற்றும் பஞ்சப்படியாக ரூ.56 ஆக ரூ.503 வழங்கப்பட வேண்டும்.  ஆனால் தொழிலாளர்களுக்கு தினசரி ரூ 240 முதல் ரூ 350 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே “சட்டப்படியான சம்பளம் ரூ.503 வழங்க வேண்டும். தொழிலாளர் களிடம் இரண்டு வருடமாக பிடித்தம் செய்யப்பட்டு, கட்டப்படாமல் உள்ள பி.எப்., இ.எஸ்.ஐ., தொகை யை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கட்ட வேண்டும். குறைவாக வழங்கப் பட்ட மீதமுள்ள சம்பளப் பணத்தை, நிறுவனத்திடம் இருந்து பெற்று தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்” என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், டி.ஆர்.இ.யு கோட்டத் தலைவர் சந்திரோதயம், கோட்டச் செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் ரமேஷ், துணைச் செயலாளர் மனோகரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அன்பு, பி.என். பேர் நீதி ஆழ்வார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநக ரச் செயலாளர் என்.குருசாமி, நக ரக்குழு ராஜன், நசீர், வடிவேலன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.