தஞ்சாவூர் ஆக.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், பூத லூர் வடக்கு ஒன்றிய திருக்காட்டுப் பள்ளி அரசு மருத்துவமனை எதிரில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே. காந்தி தலைமை வகித்தார். பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர் போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார். சி.சிவசாமி, எம்.சம்சுதீன், பி. முருகேசன், எஸ்.மெய்யழகன், ஏ. சந்திரா, எம்.ரமேஷ், பி.கலைச் செல்வி, ஆர்.உதயகுமார், டி.ஸ்ரீதர், ஆயிராசு, செபாஸ்டின் ராஜ், எம்.ராஜேந்திரன், ஏ.அறிவழகன், ஐ. ஈசாக், வி.தங்கராசு, கே.பழனி, சி.கரிகாலன், பாலசுந்தர், என்.வி. கலைக்குழு அரங்கராசன் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கை, கால்களில் கட்டுப் போட்டபடியும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் நூத னப் போராட்டம் நடத்தினர். இதில், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். நோயாளிகளை சிகிச்சைக்காக அலைக்கழிக்கக் கூடாது. உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகளை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். இரவிலும் மருத்துவமனையில் மருத்துவர்கள் தங்கி மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். மகப்பேறு சிறப்பு மருத்துவர் மற்றும் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். எக்ஸ்ரே வசதி செய்து தரவேண்டும். பிரேத பரி சோதனை செய்வதற்கு ஊழி யர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏரா ளமான கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.