tamilnadu

img

திருப்பனந்தாள் பகுதியில் ராமலிங்கம் வாக்குச் சேகரிப்பு

கும்பகோணம், ஏப்.13-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்ராமலிங்கத்திற்கு வாக்கு கேட்டு, திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள் பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பிரச்சாரம் செய்தார். வேட்பாளர் ராமலிங்கம் கூறியபோது, விவசாயக் கடன், நகைக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றார். பிரச்சாரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட கட்சிகள், திமுக மாவட்ட செயலாளர் சுகல்யாண சுந்தரம், துணை செயலாளர் கோவி.அய்யாராசு, சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத்தலைவர் லோகநாதன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.