tamilnadu

மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி

 தஞ்சாவூர், அக்.22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம் பலம் கடைவீதியில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் குப்பைகள் தேங்கி நின்றும், அடைப்பு ஏற்பட்டும் தண்ணீர் தேங்கி நின்றது. இது குறித்து, ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு கிடைத்த தகவலின் அடிப்ப டையில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சு.சடையப்பன், கோ.செல்வம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு நடத்தினர். இதையடுத்து மழைநீர் வடிகால் சீரமைக்கப்பட்டு தேங்கிக் கிடந்த மழை நீர் வடிய வைக்கப்பட்டது. தொடர்ந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.  இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கூறுகையில், “கடை வீதியில் கடைகளில் சேகரமாகும் குப்பைகள், உணவக கழிவுகள், இலைகளை தெருவில் கொட்டாமல், உரிய குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்” என்றனர்.