சேலம், செப்.7- 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குளத்தை சீர மைக்கும் பணியை சனி யன்று மாநகர ஆணையர் துவக்கி வைத்தார். சேலம் மாநகராட்சி நீர் மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக 18ஆம் நூற் றாண்டில் கட்டப்பட்ட குளம் சீரமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் துவக்கிவைத்தார். சேலம் மாநகராட்சியில் நீர் மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகரத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைப்பு பணியை செய்து வருகிறது. இதற்காக கடந்த 10 ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வரு கிறது. அதன் ஒரு பகுதியாக அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட கோரிமேடு பகுதியில் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்ட ராஜா ராணி குளத்தை தூய்மை யாக்கும் பணியை மாநகராட்சி ஆணை யாளர் சதீஷ் துவக்கி வைத்தார். இதேபோல் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பள்ளப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி ஆகியவற்றில் உள்ள முட்புதர்களை அகற்றி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங் களில் மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை நகர மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. குளம் சீரமைப்பு பணியில் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் பாஸ்கரன், சுந்தர்ராஜன், ரமேஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.