tamilnadu

img

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக ! அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 11- ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் தொழில் மற்றும் வாழ்வா தாரத்தை பாதுகாத்திட வேண்டும் என வலி யுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலை மையில், தஞ்சை ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  அம்மனுவில் கூறியிருப்பதாவது, ஊர டங்கால் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 50 தினங் களாக வாழ்வாதாரம் இழந்து, நாள்தோறும் வறு மையோடும், பட்டினியோடும் வாழ வழியின்றி தவித்து வருகின்ற 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்தை பாது காத்திட வேண்டும்.  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மாதம் ரூ 10,000 மற்றும் உணவுப்பொருட்களை ஊரடங்கு முடியும் வரை வழங்க வேண்டும்.

அவசர, அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் ஆட்டோக்களை காவல்துறை தொந்தரவு செய்யக் கூடாது. ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாவட்டத் தில் இயங்கும் அனைத்து ஆட்டோக்களையும் இயக்குவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். அரசு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும், எப்.சி, பெர்மிட், இன்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்ட கட்டணங்களையும் தள்ளுபடி செய்திட வேண்டும்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள் ளது.  தொ.மு.ச பொதுச் செயலாளர் செ.முருகா னந்தம், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் எம்.தீயத் இளங்கோவன், தேமுதிக தொழிற்சங்கத் தலைவர் மா.திரு.நாகராஜன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர்கள் பி.என்.பேர்நீதி ஆழ்வார், கே.அன்பு, சிஐடியு நகரச் செயலாளர் எம்.சுரேஷ், நகரத் தலைவர் எஸ்.ஜோதி, மக்கள் அதிகாரம் என்.சாமிநாதன் உடனிருந்தனர்.