tamilnadu

பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக - மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜூலை 19- பழங்குடி மக்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்திட வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள் ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ். பரமசிவம் அனுப்பிய மனு வில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், ஆனைமலை மற்றும் வால்பாறை  தாலுகாவிற்கு உட் பட்ட 17 வன கிராமங்களில் வசித்து வரும் பூர்வ குடிமக்கள் குடியிருப்புகளுக்கு வனத்துறை யின் மூலமாக கடந்த 15 ஆண்டு களுக்கு முன் வழங்கப்பட்ட சோலார் மின் விளக்குகள் முழுவ தும் தற்போது பழுதடைந்து பயன் படுத்த முடியாத நிலையில் உள் ளது. மேலும், காடம்பாறை, நவ மலை, சர்க்கார்பதி, போன்ற இடங் களில் மின் உற்பத்தி செய்யப் பட்டு வரும் நிலையில், உற்பத்தி செய்யப்படுகிற கிராமங்களிலே வசித்து வருகிற மக்களுக்கு மின் சாரம் வழங்கிட தொடர்ந்து மறுக் கப்பட்டு வருகிறது.

இதனால், பழங்குடி மக்கள் மின்சாரம் இல்லா மல் கடும்  துயரத்திற்கு ஆளாகி வரு வது அரசு நிர்வாகத்திற்கு அறிந் தும், கண்டும் காணாமல் இருந்து வருவது வேதனை அளிக்கிறது.  கடந்தாண்டு ஏற்பட்ட பெரு மழை வெள்ளத்தால் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் முழு வதும் அடித்துச் செல்லப்பட்ட சர்க்கார்பதி பழங்குடியின மக்க ளுக்கும், கல்லார் குடி பழங்குடி யின மக்களுக்கும் இதுவரை வீடு கள் அமைத்துத் தர வனத்துறை யும், மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியிலேயே தற் காலிக கொட்டகை அமைத்து குடி யிருந்து வருகின்றனர். எனவே, பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க குடி யிருப்புகளுக்கு மின்சாரம் வழங் கிட வேண்டும். மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக, பாதுகாப்பான வீடுகள் அமைத்துத் தர வேண்டும். அனைத்து வனகிராமங்களுக்கும் அனுபவ நிலப்பட்டா வழங்க வேண்டும். வனத்துறையில் வேலை மறுக்கப்பட்ட பழங்குடி யின இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கிட வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டு மென அம்மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.