தஞ்சாவூர், டிச.18- தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என பெரியகோவில் உரிமை மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகம் 5.2.2020 அன்று நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பெரியகோவில் உரிமை மீட்பு குழு தலைவர் அயனாபுரம் சி.முருகேசன், பொருளாளர் பழ.ராசேந்திரன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராசுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ‘‘மாமன்னன் ராஜராஜசோழ னால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வரும் பெரிய கோவில் திருவிசைப்பா பாடல் பெற்றது. மேலும் தமிழர்களின் உயரிய கட்டிடக்கலைக்கு சான்றாக வும் விளங்கி வருகிறது. 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவை, 12 திருமுறைகளில், தேவாரப் பாடல்க ளை கொண்டு செந்தமிழால் பாமாலை சூட்டி தமிழ் முறைப்படி நடத்த வேண்டும். காரணம், இறைவனை குறிப்பிட்ட மொழி யில்தான் வழிபட வேண்டுமென்று எந்த ஆகம விதிகளிலும் குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாட்டின் தாய்மொழி தமிழ் என்பதாலும், ராஜராஜசோழன் திருஞானசம்பந்தர், திருநா வுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடப் பற்ற தேவார, திருவாசகப் பாடல்களை மீட்டு, பெரியகோவில் உள்ளிட்ட தமிழகத்தில் பல கோவில்களில் ஓத வழிவகுத்தவர் என்பதாலும், கும்பாபிஷேகத்தை தமிழ் மொழியில் நடத்த வேண்டும். கும்பாபிஷேகத்திற்காக வெளியிடப்படும் மலர், அழைப்பிதழ்களில் பிற மொழி சொற்கள் கலக்காது, தமிழ் வார்த்தைகளை பயன்படுத்த, தமிழ் சான்றோர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.