tamilnadu

img

ஓய்வூதியர் சங்க ஆலோசனைக் கூட்டம்

 தஞ்சாவூர், டிச.15- தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஆலோசனைக் கூட்டம், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு, வட்டத்தலைவர் ஆர்.அண்ணாதுரை தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.தமிழரசன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி னார். கிளைச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் வரவேற்றார். த.வேதையன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். டிசம்பர் மாதம் பிறந்த நாள் காணும் 23 ஓய்வூதியர்களை பலத்த கரவொலிக்கிடையே தெட்சிணாமூர்த்தி வாழ்த்திப் பேசினார்.  வேலை அறிக்கையை, செயலாளர் கன.கல்யாணம் வாசித்தார். பொருளாளர் அறிக்கையை எஸ்.கே.பாலகிருஷ்ணன் வாசித்தார். “பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்” என்ற தலைப்பில் பள்ளத்தூர் த.சந்திரமோகன், “என்றென்றும் பாரதி” என்ற தலைப்பில் டாக்டர் மு.செல்லப்பன், “டிச.17 ஓய்வூதியர் உரிமை நாள்” என்ற தலைப்பில் மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். நிறைவாக கே.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.