tamilnadu

img

பாசனத்திற்காக அணைகளில் தண்ணீர் திறக்க உத்தரவு

சென்னை, ஆக.20- பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடை மேல ழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகி யான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடி யன் கால்வாய், கோடகன் கால்வாய்கள் மூலம்  தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் மற்றும் மக்களி டம் இருந்து கோரிக்கைகள் வந்ததாகவும் அதனை  ஏற்று ஆக.21 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9 ஆம்  தேதி வரை 1000 மில்லியன் கன அடி தண்ணீர்  திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, பாளை யங்கோட்டை வட்டங்களில் உள்ள கிராமங்களில் 24 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்றும், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.