தஞ்சாவூர், நவ.3- பேராவூரணி லயன்ஸ் சங்கம் சார்பில் ரயிலடி முன்பு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் கே.குட்டி யப்பன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோ ருக்கு நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர்கள் ஆர்.குமார், என்.சர வணன், பொருளாளர் ஏ.ஜெயச்சந்திரன், உறுப்பினர்கள் ஆர்.ரவிச்சந்திரன், எஸ்.வைரவன், வி.எம்.தமிழ்செல்வன், இ.வீ.காந்தி, ஏ.அடைக்கலம், பி.கோவிதரன், கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.