தஞ்சை, ஜூலை 18- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் கல்வி ஆண்டிற் கான ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் மற்றும் வரலாறு, முதுகலை நாடகம் மற்றும் அரங்கக்கலை, முதுகலை கடல்சார் வரலாறு, முதுகலை கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், முதுகலை தமிழ் ஆகிய முதுகலை வகுப்புகளின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. புதிய வகுப்புகளைத் தொடங்கி வைத்து துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் பேசுகையில், ‘பன்னிரெண்டாம் படித்த கிராமப்புற மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் முது கலை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. தமிழக பல்கலைக்கழகங்களிலேயே முதன் முறையாகத் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையில் முதுகலை நாடகம் மற்றும் அரங்கக்கலை படிப்பை, தமிழ் வழியில் தொடங்கியுள்ளது என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் ச.முத்துக் குமார், சுவடிப்புலத் தலைவர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பி னர் பா.ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்ன தாக இலக்கியத் துறைத் தலைவர் ஜெ.தேவி வர வேற்றார். நிறைவாக நாடகத்துறைத் தலைவர் பெ.கோவிந்த சாமி நன்றி கூறினார். மக்கள் தொடர்பு அலுவலரும், பல்க லைக்கழகத் துணைப் பதிவாளருமான கோ.பன்னீர்செல்வம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.