தஞ்சாவூர், ஜூலை 15- தஞ்சாவூர் அருகே காட்டுத் தோட்டத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகம் முன்பு, தனியார் விதை நெல்லால் ஏற்பட்ட நட்டத்துக்கு இழ ப்பீடு கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் அருகே, கோவிலூர் கிராமத்தில் தனி யார் நிறுவனத்திடமிருந்து, ஆடுதுறை 38 விதை நெல்லை சுமார் 20 விவசாயிகள் வாங்கி கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்தனர். ஆனால், கதிர் வந்தபோது மிகக் குறைவான அளவிலேயே நெல் விளைச்சல் ஆனது. ஒவ்வொரு கதிரிலும் நான்கைந்து நெற்கதி ர்கள் கூட கிடைக்கவில்லை. இதனால், ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பு ஏற்பட்டது. இதை விதை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரி 6 மாதங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை. உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகி த்தார். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி, ஒன்றியச் செயலர் ஏ.நம்பி ராஜன் உள்ளிட்டோரும், பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.