கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் ஆரூரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகளை கையகப்படுத்தி அரசு நிர்வாகத்தை உடனே ஏற்று நடத்த ஆவன செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும். சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகள் பெயரில்அவர்களுக்கே தெரியாமல் கடன் வாங்கி மோசடி செய்த ஆலை அதிபர்கள் மற்றும் துணை போன வங்கி அதிகாரிகள்,ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இதுவரை நடவடிக்கைஎடுக்கவில்லை, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் பெயரில் ஆலைகள் வங்கியில் வாங்கிய கடனை உடனே திரும்ப செலுத்தி, விவசாயிகள் வங்கிகளில் மீண்டும் வேளாண் கடன் பெற ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தஞ்சை மாவட்டம் பாபநாசம் அண்ணா சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம், சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன் உட்படஅனைத்து விவசாயிகள் சங்க, அரசியல் கட்சிகளின் மாவட்டசெயலாளர்கள், தலைவர்கள் கண்டன முழக்கம்செய்தனர்.